நெல்லையில் கவின்குமார் என்ற இளைஞர் காதல் விவகாரத்தின் காரணமாக ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நவீன காலத்திலும் சாதியை தூக்கி பிடித்து நடக்கும் இது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாற்று சாதியினரை காதலிப்பதே தவறு என்ற எண்ணத்தை திணிக்கும் விதமாக, பழி தீர்க்கும் விதமாக நடக்கும் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தி வருகிறது. சாதி என்ற போர்வையில் இருந்து மெல்ல வெளிவந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சாதிய ஆணவ படுகொலைகள் மீண்டும் பல்லாண்டுகள் நம்மை பின்னோக்கி தள்ளும் விதமாகவே உள்ளது.
நெல்லையில் கவின் குமார் என்ற இளைஞர் கைநிறைய சம்பாதித்தும், தாய் தந்தையர் அரசுப் பணிகளில் இருந்தும், மாற்று சாதிப் பெண்ணை காதலித்த காரணத்தால் பெண்ணின் சகோதரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்கள் மகனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் அவரது உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி போராடினர். கொலை செய்துவிட்டு சரணடைந்த சுர்ஜித் மீது குண்டாஸ் பாய்ந்தது. மேலும், சுபாஷினி தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கவின் உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
தனது மகனின் சாவுக்கு நீதிகேட்டு போராடி வருகின்றனர். இந்த நிலையில், தனது மகனை கொலை செய்த சுர்ஜித்தை வெளியே விடக்கூடாது என்றும் ஜாமீன் வழங்கவே கூடாது எனவும் கவின் தந்தை தெரிவித்தார். அவனை வெளியில் விட்டால் தன்னை திருநெல்வேலிக்கு தாதா என சொல்லிக் கொள்வான் எனக் கூறினார்.
அவனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறிய அவர், வெளியில் வந்தால் இன்னும் பத்து பேரைக் கொள்வான்., அதையே தொழிலாக நடத்துவான் என தெரிவித்தார்.