தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. சிகிச்சை முடிந்து, சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த இளைஞர் அரிவாளை எடுத்து கவின்குமாரை வெட்ட துணிந்துள்ளார். அவரிடம் இருந்து தப்ப முயன்ற கவின், உயிரை கையில் பிடித்து ஓடியுள்ளார். இருப்பினும் கவினை அந்த இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இதை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது சுர்ஜித் என்ற இளைஞர் கவின்குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தன் சகோதரி உடன் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகவும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞர் சுர்ஜித் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கவின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் இன்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். சுர்ஜித்தின் தந்தை மற்றும் தாய் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து படுகொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோர் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்
இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலை...! "எங்கள் மகனுக்கு நீதி வேண்டும்"..! பெற்றோர் காத்திருப்பு போராட்டம்!
நீதி மட்டும்தான் ஜெயிக்கும்னு நெனச்சிட்டு இருந்தோம் என்றும் விசாரணையே இல்லாம எந்த உலகத்துலயாவது தீர்ப்பு கொடுப்பாங்களா? வழக்கில் இருந்தே விடுதலை ஆவது போல் தீர்ப்பு கொடுத்திருக்காங்க எனவும் தெரிவித்தனர். நாங்க இவ்ளோ போராடி என்ன செய்ய.. கடைசில ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்களா? எந்த சட்டத்தை வச்சு அவங்க ரெண்டு பேரையும் விடுவிச்சாங்கனு எங்களுக்கு தெரியணும் என கூறினர்.
இதையும் படிங்க: கவின் கொலை வழக்கில் சுஜித் பெற்றோர் விடுவிக்கப்பட்டது ஏன்?... வெளியானது பரபரப்பு பின்னணி...!