சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 3) காலை 10:30 மணிக்குத் தனது இறுதித் தீர்ப்பை வழங்குகிறது.
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு மிகக் கடுமையான களப்போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அத்தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டதாகவும், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா மற்றும் முறைகேடுகள் அரங்கேறியதாகவும் குற்றம்சாட்டி, கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு (Election Petition) தொடரப்பட்டது.

இந்த தேர்தல் வழக்கின் அனைத்துத் தரப்பு வாதப் பிரதிவாதங்களும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மீதான விசாரணைகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு அளிக்க உள்ளதாக நீதிமன்ற அலுவல் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொளத்தூரில் திமுக புகார் நிரூபிக்கப்படவில்லை! தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேட்டி!
திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டு வந்த கொளத்தூர் தொகுதியின் தேர்தல் முடிவு தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதால், திமுக மற்றும் தவெக ஆகிய இருதரப்பு முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் தீர்ப்பை மிக ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!