• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    கூடுவாஞ்சேரியில் பிரியாணி அண்டாவில் மனிதக்கறி சமைத்த கொலையாளி தம்பதி மணிப்பூரில் கைது செய்யப்பட்ட நிலையில் தலையை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம்
    Author By Amaravathi Mon, 31 Aug 2026 08:02:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kuduvanchery women briyani murder update

    கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ஆக்ராவை வந்தடைந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவப்பு நிற சூட்கேஸினுள் ஆணா? பெண்ணா? என அடையாளம் தெரியாத சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது. உடல் பாகங்களை ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது. தலை மற்றும் சில கை கால்கள் இல்லாமல் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, உத்தரப் பிரதேச அரசு ரயில்வே காவல்துறை,  தமிழ்நாடு ரயில்வே காவல்துறையின் உதவியை நாடினர். 

    ரயிலில் ஏறுவதற்கு முன்பு, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்னை சென்ட்ரலுக்குள் நுழைவதை சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்துள்ளதும்,  தம்பதியினர் சூட்கேஸை ஒரு பெட்டிக்குள் வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே அதிலிருந்து இறங்கி, சென்னை பார்க் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து புறநகர் ரயிலில் ஏறி கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கியதும் சிசிடிவி காட்சி உதவியுடன் ரயில்வே போலீசார் கண்டறிந்தனர்.

    கூடுவாஞ்சேரியில் இறங்கிய அந்த தம்பதி அங்கிருந்து ஆட்டோ மூலமாக தப்பி சென்றிருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வீட்டிலிருந்து அந்த தம்பதி சூட்கேசுடன் சென்றது தெரிய வந்தது. 

    இதையும் படிங்க: நள்ளிரவில் பயங்கரம்... தூத்துக்குடியில் பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை...!

    இந்நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்ற போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீடு முழுவதும் இரத்தமாக காட்சி அளித்ததும், ஒருவரை கொலை செய்து உடலை எலும்பு தனியாக, சதை தனியாக வெட்டி எடுத்து காய்கறிகள் போட்டு பிரியாணி டபராவில் சமைத்தும் வட மாநிலத்தில் பிரியாணி செய்வது போல் மைதா மாவு போட்டு தம் போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹைதுல் நிஷா ஆகியோர் தங்கி இருந்தது தெரியவந்தது. 

    கொலையாளிகளின் புகைப்படத்தை காட்டி உறுதிப்படுத்திய போலீசார் இறந்த பெண் ஹயத்துல் நிஷா என்பதும் தாம்பரம் மெப்ஸ்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 19-வயதில் மகன் உள்ளதும் இவர் தாம்பரத்தில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இதனை அடுத்து அவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட ஹயத்துல் நிஷாவும் தனது கணவரை பிரிந்து மகனுடன் தாம்பரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் ஹயத்துல் நிஷாவும், மாணிக் லஸ்கரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூன் மாதம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து மாணிக் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹைதுல் நிஷாவும் ஒன்றாக தங்கி இருந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து கொலை சம்பவம் நடைபெற்ற இடம் கூடுவாஞ்சேரி என்பதால் ஹைதுல் நிஷாவின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைத்து அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் காஷிம்பூர் பகுதியில் தனது நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த மாணிக் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து மணிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் ஆணை பெற்று விமான மூலமாக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்து கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

    தொடர்ந்து குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஹயத்துல் நிஷா (45) மாணிக் லஸ்கர் உடன் ஏற்பட்ட கள்ளக்காதலின் காரணமாக கர்ப்பம் அடைந்துள்ளார். தொடர்ந்து மாணிக் லஸ்கரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி இருவரும் கூட்டு சேர்ந்து ஹயத்துல் நிஷா வீட்டில் தங்கி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். 

    அதன்படி கடந்த ஜூலை இரண்டாம் தேதி காலை ஹயத்துல் நிஷாவின் வீட்டிற்கு வந்த மாணிக் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி இருவரும் ஹயத்துல் நிஷாவின் கழுத்தை அறுத்து பிரியாணி அண்டாவில் அவரின் ரத்தத்தை பிடித்து உள்ளனர். தொடர்ந்து youtube மூலமாக வீடியோ பார்த்து ஆட்டின் உடலை அறுப்பது போல சதை தனியாக எலும்பு தனியாக பிரித்து வெட்டி உள்ளனர். 

    பின்னர் ஹயத்துல் நிஷாவின் உடலில் இருந்து எலும்பை மட்டும் பிரித்து ஜூலை மூன்றாம் தேதி சூட்கேஸில் வைத்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துவிட்டு வந்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருந்த சதை மற்றும் மற்ற உடல் உறுப்புகளை பிரியாணி அண்டாவில் வினிகர், உப்பு, காய்கறிகள். சேர்த்து சமைத்து மைதா மாவு போட்டு பேக்கிங் செய்துள்ளனர். 

    இதனால் நீண்ட நாட்களுக்கு துர்நாற்றம் அடிக்காமல் உடல் அழுகிவிடும் என நினைத்து அவர்கள் மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில் கொலை சம்பவம் நடைபெற்று 25 நாட்களை கடந்த நிலையில் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு பெண்ணை கொலை செய்து உடலை கூறு கூறாக வெட்டி ரயில் மூலமாக டெல்லி அனுப்பியதும், பிரியாணி அண்டாவில் சதை மற்றும் மற்ற பாகங்களை வேக வைத்து கொடூரமான முறையில் நடைபெற்ற இந்த கொலை இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாளை காலை குற்றவாளிகளை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 

    மேலும் கொலை செய்யப்பட்ட ஹயத்துல் நிஷாவின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் தலையை குறித்தான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
     
    இதையும் படிங்க: கொலை நகரமா? கொங்கு நகரமா?... ஒரே மாதத்தில் 9 கொலைகள்... குலை நடுங்கும் கோவை மக்கள்..!

    மேலும் படிங்க
    ஆனைமங்கலம் செப்பேடுகள்.!  ஜவாஹிருல்லா வைத்த முக்கிய கோரிக்கை..! அமைச்சர் ராஜ்மோகன் வாக்குறுதி..!

    ஆனைமங்கலம் செப்பேடுகள்.! ஜவாஹிருல்லா வைத்த முக்கிய கோரிக்கை..! அமைச்சர் ராஜ்மோகன் வாக்குறுதி..!

    தமிழ்நாடு
    பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்... நினைத்ததை எல்லாம் பேசக்கூடாது.!! வைகோ தடாலடி.!!

    பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்... நினைத்ததை எல்லாம் பேசக்கூடாது.!! வைகோ தடாலடி.!!

    தமிழ்நாடு
    #BREAKING: கொங்கு மண்டல அரசியலில் பூகம்பம்... திமுகவிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்..!!

    #BREAKING: கொங்கு மண்டல அரசியலில் பூகம்பம்... திமுகவிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING கஜானாவில் காசில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அதிரடி ரத்து... தவெக அரசு தடாலடி முடிவு...!

    #BREAKING கஜானாவில் காசில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அதிரடி ரத்து... தவெக அரசு தடாலடி முடிவு...!

    அரசியல்
    சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! முக்கிய துறைகள் மீதான விவாதம்..! எகிறும் எதிர்பார்ப்புகள்.!!

    சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! முக்கிய துறைகள் மீதான விவாதம்..! எகிறும் எதிர்பார்ப்புகள்.!!

    தமிழ்நாடு
    நொடிப்பொழுதில் நடுக்கடலில் அரங்கேறிய கோரம்... 7 பேர் துடிதுடித்து பலி... 270 பேரின் நிலை என்ன?

    நொடிப்பொழுதில் நடுக்கடலில் அரங்கேறிய கோரம்... 7 பேர் துடிதுடித்து பலி... 270 பேரின் நிலை என்ன?

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share