கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி பாபுராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துவேல் ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் இருசக்கர வாகனத்தில் நண்பர்களை பார்க்கச் சென்றுள்ளனர். கும்பகோணம் அருகே கொட்டையூர் புறவழிச்சாலையில் வேகமாக சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியுள்ளது.

இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். தகவல் அறிந்ததும் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன் இருவரது சடலத்தையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த நிலையில், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலை.! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
இதையும் படிங்க: கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலை.! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...