கடந்த ஏப்ரல் 22- ஆம் தேதி இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் நகருக்கு அருகிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், 26 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. இதில் 25 இந்தியர்களும் ஒரு நேபாளியும் உயிரிழந்தனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா (LeT) இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதல், 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத நிகழ்வாகக் கருதப்படுகிறது
இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில், மூன்று பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த பாகிஸ்தான் குடிமக்களாக அடையாளம் காணப்பட்டனர். இந்தத் தாக்குதல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கியது, இதனால் 1960ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி ஒப்பந்தம் இந்தியாவால் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ஆயுதப் படைகள் கடந்த மே 7 ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தன. இதில் லஷ்கர் இ தொய்பாவின் முரிட்கே மற்றும் ஜெய்ஷ் இ முகமதுவின் பஹவல்பூர் தலைமையகங்கள் முக்கிய இலக்குகளாக இருந்தன. இந்தத் தாக்குதல்கள், பயங்கரவாத உள்கட்டமைப்பை மட்டுமே குறிவைத்து, பாகிஸ்தான் இராணுவ நிறுவனங்களை தவிர்த்து, மிகவும் துல்லியமாக நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: உலகத்துகே டாலர் தான் ராஜா! அதை அழிக்க பாக்குறாங்க! பிரிக்ஸ் நாடுகளை கடுமையாக சாடும் ட்ரம்ப்.. முற்றுகிறது வரிப்போர்!

இந்த நடவடிக்கையில் ஜெய்ஷ் இ முகமதுவின் மசூத் அசாரின் மைத்துனர் உட்பட ஐந்து முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய விமானப்படை மற்றும் இராணுவத்தின் தொழில்நுட்ப திறன் மற்றும் துல்லியமான தாக்குதல் திறனை இந்த ஆபரேஷன் வெளிப்படுத்தியது. இதன் பின் இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டை நிறுத்தப்பட்டது.
பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும். அதுவரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து அமலில் இருக்கும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்கள் நேபாளம் வழியாக இந்தியாவில் ஊடுருவி தாக்குதலை நடத்தலாம் என்று அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் சுனில் பகதூர் தாபா எச்சரித்துள்ளார்.
நேபாள அதிபரின் ஆலோசகர் சுனில் பகதூர் தாபா, கடந்த 9 ஆம் தேதி காத்மாண்டுவில் நடந்த ஒரு உயர்மட்ட கருத்தரங்கில், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது போன்ற பாகிஸ்தான் மையமாக செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவை தாக்குவதற்கு நேபாளத்தை ஒரு பாதையாக பயன்படுத்தலாம் என எச்சரித்தார்.
இந்தியாவும், நேபாளமும் 1751 கிமீ தூரம் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லையில் பாதுகாப்பு கெடுபிடிகள் என்பது சற்றே இலகுவான ஒன்று என கூறலாம். நேபாளம் வழியாக இந்தியாவில் பயங்கரவாதிகள் கால் பதிக்கலாம் என்பதற்கு கடந்த கால சம்பவங்கள் சிலவற்றை நினைவு கூரலாம்.
குறிப்பாக, 1999ம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டில்லி நோக்கி வந்த விமானம் அதில் ஆயுதங்களுடன் பயணித்தவர்களால் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. நேபாள விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடே கடத்தலுக்கு முக்கிய காரணியாகவும் அமைந்தது என
இதையும் படிங்க: கேரள நர்ஸுக்கு ஜூலை 16ல் தூக்கு!! கறார் காட்டும் ஏமன் அரசு.. அழுது புலம்பும் இந்திய குடும்பம்!!