தமிழ்நாடு அரசியலில் தற்போது பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது பொதுக்குழு கூட்டத்தை ஜூன் 27-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளது. இந்தக் கூட்டம் கட்சியின் எதிர்கால திசை, திமுகவுடனான உறவு மற்றும் அடுத்தகட்ட அரசியல் உத்திகள் ஆகியவற்றை விவாதிக்கும் முக்கிய மேடையாகப் பார்க்கப்படுகிறது.
பல ஊகங்களுக்கு மத்தியில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த 32-வது பொதுக்குழு கூட்டம், கட்சியின் நிர்வாகக் குழு முடிவின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

கூட்டத்தில் கட்சியின் உள் விவகாரங்கள், தலைமைப் பொறுப்புகள், எதிர்காலத் தேர்தல் உத்திகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் அளித்த பேட்டியில் பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தி இருந்தார். வரும் 27ஆம் தேதி மதிமுக வின் பொதுக்குழு கூட்டம் கூடும் நிலையில் திமுகவுடன் கூட்டணி தொடருமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமா? நிர்பந்தமா? வைகோ, துரை வைகோ பேச்சால் திமுக அப்செட்!
இந்த நிலையில் வைகோவின் பேச்சு தொடர்பாக லியோனி கருத்து தெரிவித்தார். “ம.தி.மு.கவும் த.வெ.கவுக்கு போறது பெரிய ஆச்சரியம் இல்ல” என்று கூறினார். இந்தக் கருத்து தி.மு.க வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என லியோனி தன் பேட்டியில் தெரிவித்தார். “வைகோ இப்படி பேசுவாருன்னு தி.மு.க காரங்க எதிர்பார்த்தது தான்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்தேன்..! ஆனால்... வைகோ பரபரப்பு பேட்டி..!!