மதுராந்தகம் அரசு நேரடி நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் இருந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.பாலியியல் தொல்லையா என்ற கோணத்தில் சந்தேகத்தை எழுப்பிய உறவினர்கள் மர்மநபரை கைது செய்யகோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அண்டவாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு நெல் சேமிப்பு கிடங்கு கடந்த ஐந்தாண்டு காலமாக இயங்கி வருகிறது.
இதில் அண்டவாக்கம் பாரதியார் தெருவை சார்ந்த முத்துலட்சுமி (42). கணவர் பெயர் சங்கர். இவர்கள் இருவரும் சேமிப்பு கிடங்கில் பணியாற்றி வருகிறார்கள். வழக்கம் போல் பணிக்கு வந்த முத்துலட்சுமி வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை என தெரிய வருகிறது. அப்போது உங்களது தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தகவல் அளித்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு வந்த அவரது மகள் பிரியா பார்த்தபோது தலை மற்றும் உடலெங்கும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் முத்துலட்சுமி கிடந்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மதுராந்தகம் டு வேடந்தாங்கல் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி தீபக் ரஜினி பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்த பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!
மேலும் அவரது மகள் கூறுகையில் எனது தாயிடம் யாரோ தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர் என்றும் அதனை என் தாய் தடுத்துள்ளார்., அப்பொழுதுதான் அவர்கள் எனது தாயை தாக்கியுள்ளனர். எனது தாய் உயிர் ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும் இங்கு வேலை செய்யும் வட மாநிலத்து இளைஞர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இப்பொழுது இங்கு யாரும் இல்லை எங்களுக்கு அவர்கள் மீதுதான் சந்தேகம் உள்ளது என தெரிவித்தார். இதுகுறித்து மதுராந்தகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!