தமிழகத்தில் 1987 ஜனவரி 1 முதல் கள் விற்பனைக்கு முழுத் தடை விதிக்கப்பட்டது. இது 1986-ல் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத் திருத்தத்தின் விளைவு. இந்தத் தடைக்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவதாக, கள்ளச் சாராயம் மற்றும் மெத்தனால் கலந்த மதுபானங்கள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள். இரண்டாவதாக, அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் TASMAC தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கம்.
MGR காலத்தில் TASMAC-ஐ வலுப்படுத்தியதும் இந்தத் தடைக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. கள் போன்ற உள்ளூர், குறைந்த ஆல்கஹால் கொண்ட பானம் அரசு மதுபான விற்பனைக்கு போட்டியாக இருந்தது. இந்தத் தடை அமலுக்கு வந்த பிறகு, கள் இறக்கும் பாரம்பரியத் தொழில் பாதிக்கப்பட்டது.

பனையர்கள், தென்னை மரங்களைச் சார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. சட்டவிரோதமாக கள் விற்பனை தொடர்ந்தாலும், அது அபாயகரமான வழிகளில் நடைபெற்றது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் போன்றவற்றில் கள் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்தத் தடை தொடர்வது பலருக்கும் கேள்வியை எழுப்புகிறது.
இதையும் படிங்க: சட்டவிரோத கட்டிடங்கள்... சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை... பரபரப்பு உத்தரவு...!
கள் விற்பனை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது என்று கேட்டுள்ளது. கள் விற்பனை அதிகரித்தால் அரசுக்கு வருமானமும் ஏற்படுமே என்று கேட்டுள்ளது. பிற மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் எண் அனுமதி வழங்கப்படக் கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு!