மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்டதில் குழந்தை உட்பட ஐந்து பேர் வயிற்றுப்போக்கு, மயக்கம், வாந்தி என உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோழவந்தான் - தென்கரை பகுதி இடையே உள்ள வைகை ஆற்றுப்பாலம் அருகே பிரீட்டா எனும் தனியார் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று மாலை சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கிரில் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளனர்.
இந்த உணவகத்தில் நேற்று இரவு கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்ட சுமார் 22 பேருக்கு நள்ளிரவு முதல் வாந்தி, பேதி கோளாறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சோழவந்தனை சேர்ந்த பிரசன்னா என்ற இளைஞர் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து அந்த உணவகத்தில் சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளார். அந்த 10 பேருக்குமே உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீமானை இலங்கை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? - நேரடியாக களத்தில் குதித்த சங்ககிரி ராஜ்குமார்
மேலும் இதை சாப்பிட்ட குழந்தை உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்டவைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த உணவு பாதுகாப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த உணவுகளை கைப்பற்றிய அதிகாரிகள் உணவு தர பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5-க்கும் மேற்பட்டோரில், ஒரு சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையிலும் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உறவுகளில் பதற்றத்தை குறைக்க கை நீட்டூம் சீனா... சந்தேகத்துடன் தள்ளி நிற்கும் இந்தியா..!