• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டின் காவல்துறைக்கு புதிய டிஜிபி... ஐபிஎஸ் மகேஷ் குமார் அகர்வால் நியமித்து தமிழக அரசு உத்தரவு!

    தமிழக காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 29 May 2026 17:35:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mahesh Kumar Aggarwal Appointed as the New DGP of Tamil Nadu

    தமிழக காவல்துறையில் குற்றப் பின்னணிகளைத் துவம்சம் செய்ததிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் தனி முத்திரை பதித்த 1994ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால், பஞ்சாப் மாநிலம் பத்திண்டாவில் பிறந்தவர் ஆவார். 46 வயதான இவர் சட்டப்பிரிவில் பி.ஏ. பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் முடித்து, சட்டம் குறித்த ஆழமான அறிவோடு காவல்துறைக்குள் நுழைந்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் அசாத்திய புலமை பெற்ற இவர், தேனி மாவட்டத்தில் இளம் எஸ்பியாகத் தனது காக்கிச் சட்டைப் பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, சென்னை பூக்கடை துணை ஆணையராக 3 ஆண்டுகள், சென்னை போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் மற்றும் தூத்துக்குடி எஸ்பி எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் முத்திரை பதித்தார். பின்னர் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் அயல்பணியாக 7 ஆண்டுகள் பணியாற்றி பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களின் முக்கிய வழக்குகளைத் துலக்கிய அனுபவம் மிக்கவர்.

    தமிழக காவல்துறைக்குத் திரும்பிய பின், சிபிசிஐடி டிஐஜி, சென்னை நகர கூடுதல் கமிஷனர் (தெற்கு), மதுரை போலீஸ் கமிஷனர் மற்றும் சிபிசிஐடி ஐஜியாகப் பல அதிரடிப் பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக, சென்னை நகர கூடுதல் கமிஷனராக இருந்தபோது, அப்போதைய கமிஷனர் விஸ்வநாதனின் கனவுத் திட்டமான சென்னை நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தில் வலது கரமாகச் செயல்பட்டுச் சாதித்துக் காட்டினார். பூக்கடை துணைக்கமிஷனராக இருந்த சமயத்தில் இவர் அறிமுகப்படுத்திய "நைட் கிரைம் டு ஜீரோ" என்ற இரவு ரோந்துத் திட்டம் வடசென்னையில் குற்றங்களை முற்றிலுமாகக் குறைத்தது. போக்குவரத்துப் பிரிவிலும் விபத்துக்களைக் கணிசமாகக் குறைத்து, மெச்சத்தகுந்த பணிக்காக முதல்வரின் பதக்கத்தையும் வென்றார். பின்னர் ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று ஆபரேஷன்ஸ் பிரிவிலும், சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வடக்கு மண்டலத்திலும் திறம்படப் பணியாற்றினார்.

    தமிழகத்தை உலுக்கிய சேலம் ஓடும் ரயில் கொள்ளை வழக்கில் துப்புலக்கி கொள்ளையர்களைக் கைது செய்தது, இந்து அமைப்புகளின் தலைவர்கள் படுகொலை வழக்கில் 3 தீவிரவாதிகளை வளைத்தது, சிறுசேரி பெண் பொறியாளர் கொலை வழக்கு, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு, வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது வழக்கு, வேலூர் ராணிப்பேட்டை தோல் சுத்திகரிப்பு ஆலை விபத்து வழக்கு மற்றும் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு எனப் பட்டியல் நீளும் அளவுக்குத் தமிழகத்தின் மிக முக்கிய மற்றும் சவாலான வழக்குகளைத் திறம்படக் கையாண்டு நன்மதிப்பைப் பெற்றவர். பழகுவதற்கு இனிமையானவர், அதேசமயம் ஊழல் கறையற்ற நேர்மையான அதிகாரி என்று சக அதிகாரிகளால் போற்றப்படும் மகேஷ் குமார் அகர்வால் தற்போது தமிழக காவல்துறையின் உச்சபட்ச பதவியான டிஜிபியாக அரியணை ஏறியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி-க்கு கடிதம்! குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தியதாகப் புகார்!

    மேலும் படிங்க
    மகள் திருமணம்.. பிரதமர் மோடிக்கு நேரில் பத்திரிகை வைத்த குஷ்பூ - சுந்தர் சி தம்பதி!

    மகள் திருமணம்.. பிரதமர் மோடிக்கு நேரில் பத்திரிகை வைத்த குஷ்பூ - சுந்தர் சி தம்பதி!

    தமிழ்நாடு
    விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    TNGASA 2026: விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் போர்ட்டல் ஓபன்!

    TNGASA 2026: விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் போர்ட்டல் ஓபன்!

    தமிழ்நாடு
    ஜூன் மாதம் பிறக்கப்போகுது.. அமலுக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன..??

    ஜூன் மாதம் பிறக்கப்போகுது.. அமலுக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன..??

    இந்தியா
    VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

    VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஜூன் 4ம் தேதி ஓப்பனிங்..!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    ஜூன் 4ம் தேதி ஓப்பனிங்..!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share