தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் - ஒழுங்கைப் பலப்படுத்தவும், நிர்வாகக் கட்டமைப்பை மேலும் திறம்பட முடுக்கிவிடவும் ஏதுவாக, சேலம் மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்ட 13 உயர் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் இன்று முக்கிய அரசாணையைப் பிறப்பித்துள்ளார்.
இந்த அதிரடிப் பணியிட மாற்ற உத்தரவின்படி, சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த திரு. ஜோஷி நிர்மல் குமார் ஐபிஎஸ் அவர்கள் தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்தின் நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக (IG Modernisation) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்; அவருக்குப் பதிலாக மூத்த காவல்துறை அதிகாரியான திரு. ஏ.ஜி. பாபு ஐபிஎஸ் அவர்கள் சேலம் மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்கவுள்ளார்.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, முக்கிய நுண்ணறிவுத் தகவல்களைக் கையாளும் பெருநகர சென்னை நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையராக (Joint Commissioner of Police, Intelligence) சந்தோஷ் ஹதிமானி ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!
பரங்கிமலை (St. Thomas Mount) துணை ஆணையராகத் மதிவாணன் ஐபிஎஸ் அவர்களும், அடையாறு (Adyar) துணை ஆணையராகத் திரு. பத்ரி நாராயணன் ஐபிஎஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்; மேலும், நிதி மோசடிகளைக் கண்காணிக்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவின் (EOW) வடக்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளராக (SP)ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அடுத்தடுத்த காவல்துறை மாற்றங்கள் தமிழ்நாடு காவல் வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!