வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மக்களே லாஸ்ட் சான்ஸ்! இறுதிக்கட்டத்தை எட்டிய SIR பணிகள்! நாளை கடைசி நாள்!
இந்த நிலையில் மாஞ்சோலையில் உள்ள வாக்குச்சாவடி எண் 102 இல் 63 வாக்காளர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் யாரும் அங்கு வசிக்கவில்லை என தெரிய வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. யாரும் வசிக்காத இடத்தில் எப்படி 63 வாக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர் பதிலளிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது மாஞ்சோலை பகுதியில் 93 பேர் மட்டும் வசித்து வரும் நிலையில் ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "போலி வாக்காளரை கண்டறியும் மென்பொருள் பயனற்றது": உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்!