தமிழகத்தின் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கோவையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தின் நுழைவு வாயில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளே வந்த தனியார் டிரைவிங் ஸ்கூல் வாகனங்களிலும் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். இதேபோல் நெல்லை என் ஜி ஓ காலனி பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தற்பொழுது அதிரடியாக உள்ளே சென்று அலுவலகம் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மோட்டார் வாகன அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். வாகன சோதனை நடைபெறும் இடத்தில் இருந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பணம் இருக்கிறதா என விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?
காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் (RTO) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கதவு ஜன்னல்களை பூட்டி விட்டு டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே செயல்பட்டு வரும் நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இடைதரகர்கள் மூலமாக கையூட்டு பெறுவதாக எழுந்த தொடர் புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம் அருகே தென்னூரில் உள்ள கும்பகோணம் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை DSP அன்பரசன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது அனைத்து நுழைவாயில்களும் அடைக்கப்பட்டு வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டிஎஸ்பி ஆம்ரோஸ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர சோதனை நடந்து வருகிறது.
சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப்பதிவு , உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு லட்சம் பெறுவதாக எழுந்த புகாரி அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் இயங்கிவரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. ஐந்துக்கு மேற்பட்டோர் அலுவலகத்தில் சோதனை மேல் கொண்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது
நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகமாக லஞ்சம் புகார் வரப்பெற்றதன் அடிப்படையில் நெல்லை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக தற்பொழுது அரை மணி நேரத்திற்கு மேலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு அலுவலர்களிடமும் துருவி துருவி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணக்கில் வராத பணம் ஏதாவது சிக்கமா ஆவணங்கள் ஏதாவது இருக்கிறதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை வரை கண்டதும் கலகலவென இருந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடியது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!