கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் மீண்டும் மதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் மல்லை சத்யாவின் புகைப்படம் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மல்லை சத்யா கட்சியில் இருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
போதாக்குறைக்கு நேற்று நிர்வாகிகளிடையே உரையாற்றிய வைகோவும் மல்லை சத்யாவிற்கு எதிராகவே பேசினார். என்னை 3 முறை காப்பாற்றியதாக மல்லை சத்யா கூறுகிறார். ஒரே ஒரு முறை மாமல்லபுரம் கடலில் இருந்து என் உயிரைக் காப்பாற்றினார். அதன் பிறகு இரண்டு முறை எப்போது என்பது தெரியவில்லை என பேசியிருந்தார். இது மதிமுக தொண்டர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: அப்படி நடந்திருக்க கூடாது! பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. வருத்தம் தெரிவித்த துரை வைகோ..!
இதனிடையே, மல்லை சத்யா கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி எம்.பி. துரை வைகோவிடம் கேள்வி எழுபப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மதிமுகவிற்குள் ஒரு சிலர் கட்சிக்கு துரோகம் செய்து வருகிறார்கள், சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து தலைமை தான் முடிவெடுக்கும். அவர்கள் வேற பிற இயக்கங்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மதிமுகவிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியே சென்ற வரை தான் திமுகவில் இணைத்துள்ளனர். தற்பொழுது தொண்டர்களாகவோ நிர்வாகிகளாகவோ இருக்கும் யாரையும் திமுகவில் சேர்க்கவில்லை.
இதையும் படிங்க: மதிமுகவில் வெடித்தது பிரளயம்... துரோகி பட்டம் கட்டி அனுப்ப பாக்குறாரு... வைகோ மீது மல்லை சத்யா குற்றச்சாட்டு..!