தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. வடக்கிழக்கு பருவுமழை தொடங்கிய பிறகு உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு பகுதி. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றெழுத்த தாழ்வு மண்டலமாக வழுபெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமான தகவலை தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதற்கு பிறகு உருவாகி இருக்கக்கூடிய இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலெழுக்கு சுழற்சி இன்று காலை 5:30 மணி நிலவரப்படி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரள -கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: காலையிலே வந்தது அலர்ட்... இந்த 10 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை...!
இந்த வலுபெறக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறுமா? அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழக்கக்கூடுமா? என்பதை பின்னர் வரும் நகர்வுகளைப் பொறுத்தே கூற முடியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும், கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழகம் சார்ந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தயாராகி வரும் சமயத்தில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: #weatherupdate: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே...!