காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் 65 சதவீத அளவிற்கு சன்னரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார். திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தினை வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு வேளாண் துறை அமைச்சர் வினோத் பேட்டி அளித்தார். அப்போது, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அதிக அளவு அதி சன்ன ரக அரிசி கொண்டு வரப்படுகிறது தமிழகத்தில் குறிப்பாக காவிரி சமவெளி மாவட்டங்களில் அது சென்னரக நெல் சாகுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நடப்பு சம்பா பருவத்தில் காவிரி சமவெளி மாவட்டங்களில் 65 சதவீத அளவிற்கு சன்னரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் வட்டத்தில் 2500 ஹெக்டேர் பரப்பிற்கு சன்ன ரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார் .
இதையும் படிங்க: கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு மளிகைத் தொகுப்பு..! மக்களுக்காக தான்..!! அமைச்சர் காந்திராஜ் விளக்கம்.!!
மேலும் சன்னரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது ஒருபுறம் இருந்தாலும், அதிசன்னரக அரிசிக்கு தான் வரவேற்பு அதிகம் உள்ளது எனவே அதிசன்ன ரக நெல் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டதற்கு ஆடுதுறை 51, 54 ,58 ,61 , என்ற ரகங்கள் சன்ன ரகத்தில் உள்ளது என தெரிவித்தார். மேலும் அதி சன்ன ரகம் நெல் சாகுபடி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார் .
இதையும் படிங்க: 8 பேர் அமைச்சரானால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா? அகிலன் விவகாரத்தில் அமைச்சர் வன்னியரசு கேள்வி!