இன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முழு மாநிலத்திலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வருகிறது.
பல தொகுதிகளில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், பெண் வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், முடிவு எப்படி வரும் என்று தெரியவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிந்தித்து ஓட்டு போடுங்க மக்களே..! வாக்களித்த பின் கனிமொழி எம்.பி பேட்டி..!
இன்று தனது வாக்கினை பதிவு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் களம் மிகவும் சூடாக இருக்கிறது என்றார். வெயிலும் அதிகமாக இருக்கிறது என்றும் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார் ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன் என்றும் யார் வேண்டுமானாலும், எப்படி வேணாலும் ஜெயிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை காக்கும் கேடயம்..! தவறாமல் ஓட்டுப் போடுங்க..! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!