பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க ஆவடி, பூவிருந்தவல்லி தொகுதி திமுக மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு திமுக தலைமை கழகம் அழைப்பு விடுத்துள்ளது. நடப்பு பருவமழையின் போது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிடும் வகையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட
மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணைமேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நடப்பு பருவமழையின் போது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும், இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மக்களே... ஆரஞ்சு அலர்ட் வந்தாச்சு..! கனமழை தொடரும் என எச்சரிக்கை...!
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்-துணைமேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் என அனைவரும் 22 ஆம் தேதி (நாளை) காலை 10.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைமை கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…! அப்போ சென்னைக்கு?