தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை வேட்பாளர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடக்கிறது. இதற்காக திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வில்சன், சல்மா,சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இதையும் படிங்க: முக்கிய வானிலை அப்டேட்! குளுகுளு கிளைமேட்! நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

திமுக வேட்பாளர்கள் மூன்று பேருடன் கமல்ஹாசனும் இன்று வேப்பு மனு தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளீட்டு ஒரு முன்னிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வேட்பு மனுவை கொடுத்தனர்.
இதையும் படிங்க: மாமியார் உடைத்தால் மண் குடம்.. மருமகள் உடைத்தால் பொன்குடம்..! தமிழில் பேசி தெறிக்கவிட்ட பவன் கல்யாண்..!