காசாவில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் காசா இனப்படுகொலை மற்றும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டமும் சென்னையில் நடந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். காசாவுக்காக கண்ணீர் வடிக்கும் திராவிட மாடல் 2.0 மானுட பற்றாளர்கள் வாழ்க என தெரிவித்தார். காசா பெருநிலத்தில் கொடூர இஸ்ரேல் நாடு நேற்றுதான் குண்டு மழை பொழியத் தொடங்கியதா என்றும் கொத்துக்கொத்தாக நேற்றிலிருந்துதான் மக்கள் மடியத் தொடங்கினார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதே அக்டோபர் மாதம் 2023 ஆம் ஆண்டுக் காசாவை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியது என்றும் இரண்டு ஆண்டுகளில் 67 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள், பெண்கள் எனப் பாகுபாடு இன்றிப் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படாத நாளே இல்லை எனும் அளவில் ஒவ்வொரு நாளும் இனப்படுகொலை நிகழ்ந்தேறியது என்றும் குறிப்பிட்டார்.

ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு ஈவு இரக்கமின்றி இந்த நூற்றாண்டின் இரண்டாவது மிகப்பெரிய இனப்படுகொலை காசாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்று கூறிய சீமான், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் மிகப்பெரிய மனித வேட்டை இப்போதுதான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா என்றும் இப்போதுதான் உறக்கத்திலிருந்து எழுந்தீர்களா எனவும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாதிப் பெயரை நீக்க சொல்லிட்டு ஜி.டி. நாயுடு பெயரில் சாலை... இதான் திராவிட மாடலா? சீமான் சரமாரி கேள்வி...!
ஆப்ரேசன் சிந்தூர் என்று மக்கள் வாழும் பகுதிகள் மீது குண்டு வீசி போர்தொடுத்த போது அதனை வரவேற்று முதலமைச்சர் தலைமையில் பேரணி நடத்திய திராவிட மாடல் திமுக அரசு, மணிப்பூர் கலவரத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக எந்தப் பேரணியும் நடத்தவில்லை என்றும் இருப்பினும் இன்றைக்குக் காசாவுக்காகக் கண்ணீர் வடிக்கிறீர்கள்., வரவேற்கிறோம்., இதேபோல 2009 இல் அருகிலிருக்கும் ஈழத்தாயகத்தில் கொடும்போரை நிகழ்த்தி இனவெறி சிங்கள அரசு இலட்சக்கணக்கில் மக்களை கொன்று குவிக்கும்போது உங்கள் கண்கள் குருடாகி இருந்ததா என சாடினார்.
காசாவில் நடைபெறும் இனப்படுகொலையை இரண்டு ஆண்டுகளாகக் கைகட்டி வேடிக்கை பார்த்த திராவிட மாடல் கூட்டம், இப்போது திடீரென்று காசாவுக்காகக் கண்ணீர் சிந்த காரணமென்ன என்றும் இப்போது ஏன் இந்த கரிசனம் என்றும் நான்கு மாதத்தில் தேர்தல் வருகிறது என்பதுதானே எனவும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து… SORRY சொன்னதால் சமரசம்…!