வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

வாய்க்கு வந்தபடி வடை சுடும் EPS… டப்பா என்ஜினை நம்பி அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

எடப்பாடி பழனிச்சாமி வாய்க்கு வந்தபடி வடை சுடுவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.

கன்னியாகுமரியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், இந்த தேர்தல் என்பது தமிழ்நாடு VS என்டிஏ என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். தன்னுடைய சக்திக்கு மீறி உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் நாங்கள் தான் என்பதை தினந்தோறும் செயல்களால் நிரூபித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்வதற்கு இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார். எப்போதுதான் வன்முறையை விட்டு வளர்ச்சியை பற்றி பாஜகவினர் பேசுவார்கள் என்று கேட்டார்.

தமிழ்நாட்டை குறை சொல்லிப் பேச பாஜகவினருக்கு தகுதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வருகிறாரோ அவ்வளவு வித்தியாசத்தில் nda கூட்டணி தோற்கும் என்று கூறினார். வாய்க்கு வந்தபடி எடப்பாடி பழனிச்சாமி வடை சுட்டுக் கொண்டிருப்பதாக விமர்சனம் செய்தார். தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயற்சி மேற்கொண்டதாக குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: முதல்வரின் கன்னியாகுமரி விசிட்… 6 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

பாஜகவின் டப்பா எஞ்சினை நம்பி அதிமுக இருப்பதாக விமர்சித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை சிறப்பு தொகுப்பு மக்களிடையே சூப்பர் ஹிட் என்று கூறினார். திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் என்ஜின் 11.9% வளர்ச்சியுடன் யாரும் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு முன்னேறி செல்வதாக தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் ஒருவரையும் பின் தங்க விடமாட்டோம் என்று தெரிவித்தார். தமிழ்நாடு வெல்லட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குமரியில் மினி டைடல் பார்க்..! சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு… அடிக்கல் நாட்டைய முதல்வர் ஸ்டாலின்..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी