தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. மொத்தமாக 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள். வேட்பாளர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் தங்களது குடும்பத்துடன் சென்று வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக கடமையாற்றினார். சென்னை தேனாம்பேட்டையில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள STET கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு முதல்வர் ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் வருகை தந்தனர். மக்களோடு மக்களாக குடும்பத்துடன் வரிசையில் நின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாக்கினை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வாக்கு செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின் உடன் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா மற்றும் பேரன் இன்பநிதி ஆகியோரும் வாக்கு செலுத்தினர்.
இதையும் படிங்க: ராயபுரம் தொகுதியில் ஓட்டுக்கு 1000 ரூபாய்.? அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு..!!
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்குப்பதிவுக்குப் பிறகு, நான் எனது உரிமையைப் பயன்படுத்தியதைப் போலவே, ஒவ்வொருவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது முக்கியமானது என்று கூறினார். மேலும், தமிழ்நாடு வெல்லும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ!! விஜயை பார்த்து திமுக கூட்டணியினர் உற்சாகம்!