திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது விழா மேடையில், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் நேருவை வைத்துக் கொண்டு அன்பின் மகேஷ் பொய்யாமொழி புகழ்ந்து தள்ளி உள்ளார். திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு பார்த்து பார்த்து தனது மாவட்டத்துக்கு என ஸ்பெஷலாக உருவாக்கியுள்ளார் என்று பேசினார்.

இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை மிகவும் பெருமையாக பேசி இருந்தார். இன்னொரு அமைச்சர் இந்த மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறார் என்றும் நம்ம தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்ன லேசு பட்டவரா என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆனதுமே அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையில் அடையாளம் என்று தெரிவித்ததாக கூறினார். நேற்று பிளஸ் டூ ரிசல்ட் வந்தது., ஒவ்வொரு ஆண்டும் அதிக விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருவதாக கூறினார். இந்த ஆண்டும் அப்படித்தான் என்று தெரிவித்த முதலமைச்சர், கல்வி தரம் பெருமளவு உயர்ந்திருக்கிறது என்றும் கல்வி இடை நிற்றல் கூடாது, பள்ளி செல்லாமல் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று வீடு வீடாகச் சென்று தேடி அறிவுரை கூறி அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ன வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கே இரண்டகம்..! திமுகவின் கொத்தடிமை ரகுபதி.. விளாசிய இபிஎஸ்..!

அதேபோல கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லி சென்றபோது அங்கிருந்த பள்ளிக்கு சென்றதாகவும், அந்த பள்ளியை பார்த்தபோது தனக்கு என்ன தோன்றியது என்றால் இதை விட சிறப்பாக தமிழ்நாடு முழுக்க மாதிரி பள்ளிகள் உருவாக வேண்டும் என்று அப்போதே முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். தன்னுடைய இந்த கடமையை சிறப்பாக அன்பில் மகேஷ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி காட்டி இருக்கிறார். குறுகிய காலத்திலேயே நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு நிறுவனங்களில் படிக்க செல்கிறார்கள்., அப்படி செல்லும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி எல்லா உதவிகளையும் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

அது மட்டுமல்ல மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் போல, தன்னுடைய திருச்சிக்கும் ஒரு அறிவு சுரங்கம் வேண்டும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை வைத்து தற்போது பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான ஒரு நூலகம் உருவாகி கொண்டு இருக்கிறது என கூறினார். தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அவர் பெருமை தேடி தந்து இருப்பதாக புகழ்ந்து பேசினார். இப்படி அமைச்சர் கே என் நேரு மேடையில் இருந்த போதே ஒரு சில வார்த்தைகள் மட்டும் அவரைப் பற்றி பேசிவிட்டு உரை முழுக்க அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் புகழை பாடியதால் கே.என். நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுப்பாகினர்.
இதையும் படிங்க: ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி!