தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. மதுரையில் விமானம் மூலம் வந்தடைந்த முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் சென்றடைந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை பல இடங்களில் திமுகவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க முதலமைச்சரை வரவேற்றனர். இதனிடையேதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பங்கேற்க உள்ளார். இந்த விழாவில் சுமார் 30,000 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக, சுமார் 1,082 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதனுடன், ஒரு லட்சத்து 2 ஆயிரம் பயனாளிகளுக்கு நில உரிமைப் பட்டாக்களும் வழங்கப்பட இருக்கிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி முதல் ரூ.1,595 கோடி வரையிலான மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி வைக்கிறார். ஏற்கனவே முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு! புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?
இந்தத் திட்டங்கள் மாவட்டத்தின் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் புதிய வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்தப் பயணமும், நலத்திட்டங்களின் தொடக்க விழாவும் மாவட்ட மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! ₹1082 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்.. களைகட்டும் ஏற்பாடுகள்!