முதலமைச்சர் ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் இன்று 50ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையிலும் துர்காஸ்டாலினின் உறுதுணை தொடர்ந்து இருந்து வருகிறது. இளைஞரணி தலைவரிலிருந்து முதல்வராவது வரையிலும் தனது கணவனுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் துர்கா ஸ்டாலின் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
ஐம்பதாவது ஆண்டு திருமண நாளை என்று கொண்டாடி வரும் ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் ஆகியோருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்களின் மகனும் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் தனது பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தனது தாய் தந்தை குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின் அம்மாவும் அப்பாவும் இல் வாழ்வில் இன்று பொன்விழா காண்பதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சுக துக்கங்கள் என எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும் மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம், இடைவெளியில்லா சுற்றுப்பயணங்கள் கடும் அரசியல் சூழல்கள், தொடர் மக்கள் பணி என எல்லாவற்றிலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் அம்மா என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்பனே முருகா... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்...!
அம்மாவின் உணர்வுகள், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத்தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறார் அப்பா என்றும் பெருமிதம் தெரிவித்தார். பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை, அம்மா என்றால் கண்டிப்பு., இப்போது, அப்பா கண்டிப்பவராகவும் - அம்மா அன்பு காட்டி அரவணைப்பவராகவும் பொதுவாழ்வில் என்னை வழிநடத்துகிறார்கள் என தெரிவித்தார். அம்மா, அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க அன்பு வாழ்த்துக்கள் மற்றும் முத்தங்கள் என்று உருக்கமாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என் வீட்டுக்காரர் தான் எல்லாமே! நானும் உங்களோட ஒருத்திங்க... நெகிழ்ந்து பேசிய துர்கா ஸ்டாலின்..!