இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாக்கு திருட்டு சான்றுகள் எந்த அளவிற்கு மோசடி நடந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் யார்? முழு விவரத்தை கொடுங்க... சுப்ரீம் கோர்ட் தடாலடி உத்தரவு!

ஒவ்வொரு மாநிலத்திற்குமான முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அரசியல் ரீதியாக இயக்கப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த நிலையில் முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக mp அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்கு உரியவர்களாக இருப்பதாக தெரிவித்தார். 9,133 பேர் எப்படி போலி முகவரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். வீட்டு எண் 11-ல் 30 வாக்காளர் அட்டை ஒரே வீட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
கொளத்தூர் தொகுதியில் வாக்குச்சாவடி 84 ல் முகமது அமீன், ஜாபர் அலி, ஆரிஃபா, ஐ சி. பீவி, அன்வர், ரைபுல்லா, ரபியுல்லா, ரபியுல்லா உள்ளிட்ட வாக்கு அட்டைகள் உள்ளதாகவும், ரபியுல்லா பெயரிலேயே மூன்று வாக்காளர் அட்டைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்டாலின் எங்கே இருக்கிறீர்கள் என்றும் ரபியுல்லா என்ற பெயர் 157வது வாக்குச்சாவடியில் எப்படி மூன்று முறை வருகிறது என்று கேட்டார். தவறுதலாக நடந்ததா அல்லது உள்நோக்கத்தோடு நடந்துள்ளதா என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: தரங்கெட்ட அரசியல்! இதையே உங்களுக்கு பண்ணா மூஞ்ச எங்க வெச்சுப்பீங்க ஸ்டாலின்? அண்ணாமலை சாடல்..!