கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட காலமாகவே உணர்ச்சிமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, 1974-ம் ஆண்டு இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கவும், தீவை மீட்கவும் வேண்டுமென அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த விவகாரம் தமிழக அரசியல் மேடைகளில் மட்டுமல்லாமல், இந்திய நாடாளுமன்றத்திலும், பொதுத் தேர்தல் காலங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிற கட்சிகள், கச்சத்தீவை மீட்பது மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை பிரதமர் இந்தியா வந்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். கூட்டு பணிக்குழுவை மீண்டும் புதுப்பிக்க இலங்கை பிரதமரிடம் வலியுறுத்து கோரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு குறித்து பேச வேண்டும் என்றும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சிரித்த முகம்... சிறந்த அரசியல்வாதி... பேரவையில் நயினாருக்கு பிறந்தநாள் சொன்ன முதல்வர் ஸ்டாலின்...!
கச்சத்தீவை மீட்பது, பாக். விரிகுடா பகுதியில் உள்ள நம் மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்பது பற்றி பேச வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்வதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: செம்ம...! நெல் கொள்முதல் விவகாரம்… பேரவையில் குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி…!