வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

ஜூன் 12ல்.. மேட்டூர் அணையில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்..! திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்க உள்ளார்.

வரும் 12 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொள்ள உள்ளார். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலம் செல்ல உள்ளார். இதற்காக சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 11-ந் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் வர உள்ளதாகவும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் மேட்டூர் செல்ல முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களையும் கட்சியினரையும் சந்திக்க உள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க: குப்பையில வீச தான் மாநிலக் கல்வி கொள்கையா? பதில் சொல்லுங்க ஸ்டாலின்.. ஃபுல் ஃபார்மில் ராமதாஸ்!!

தொடர்ந்து ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் தண்ணீர் திறந்து வைக்க உள்ளதாகவும் அதைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகளாகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஒரு லட்சம் பயனாளிகளுக்கு 1200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी