திருப்பூர் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த புதிய திட்டப் பணிகளை அடைக்கல் நாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 61 திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், 1427 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து 35 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியதுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்ச ஸ்டாலின், திமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.
திருப்பூரில் உயர்மட்ட பாலங்கள், கோவில் குடமுழுக்குகள், பூங்காக்கள், டைட்டில் பார்க், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் காங்கேயம் அரசு மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை தரம் உயர்வு மற்றும் மினி டைட்டில் பார்க் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து பலமுறை சட்டமன்றம் மற்றும் பொதுவெளியில் குரல் கொடுத்து தற்போது திறந்து வைத்துள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பயன்படுத்துகிறது பாஜக... முதல்வர் ஸ்டாலின் சரமாரி சாடல்!

அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு என்று ஏதாவது செய்திருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை திமுக ஆட்சியில் பணி முடித்து செயல்படுத்தி வருவதாகவும் திருப்பூரில் கலைஞர் அறிவித்து ஐந்து பாலங்கள் அமைக்க உத்தரவிட்ட நிலையில் பணியை அதிமுக ஆட்சி முடக்கியதாகவும் தெரிவித்தார்.
இபிஎஸ் எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்தில் இருந்து பிரச்சார பயணத்தை தொடங்கினார் என்றும் கேள்வி எழுப்பினார். ஆனால் அதிமுகவின் தோல்வி இங்கிருந்து தான் தொடங்கும் என்றும் தெரிவித்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சூப்பர் ஹிட் ஆனதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் ஊர் ஊராக சுந்தரா ட்ராவல்ஸ் பேருந்தில் சென்று பொய்களை உரக்க பேசினால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைப்பதாகவும் சாடினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நீதிமன்றத்தை நாடாதீர் என கண்டனம் தெரிவித்து கோர்ட் அபராதம் விதித்ததாகவும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பார்த்து வயிற்று எரிச்சலுடன் இபிஎஸ் அதனை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை கேட்டாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அடிக்கு மேல் அடி விழுவதாக கூறினார்.
போகும் இடமெல்லாம் தன்னைப் பற்றி ஒருமையில் பேசி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதையும் படிங்க: வாங்க முதல்வரே! திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ... மக்கள் உற்சாக வரவேற்பு!