திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். 33வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் முதல்வர் உரையாற்றினார். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள் என்று தெரிவித்தார்.
உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் இன்று படித்து முன்னேற காரணமாக திராவிட இயக்கம் இருப்பதாகவும் என்றும் உயர்கல்விக்கு என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி என்றும் தெரிவித்தார்.

பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். கல்விக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ அதே வேகத்தில் ஈடு கொடுத்து நாமும் ஓட வேண்டும் என்று அறிவுறுத்தினார். பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் இந்திய அளவில் தனக்கு என்று தனி இடம் பிடித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். காலம் அறிந்து செயல்பட்டால் அனைத்தையும் வெல்லலாம் என்றும் செய்யும் செயலில் அறம் மற்றும் வாய்மை ஆகியவற்றை தவற விடக்கூடாது என்பதை நம் மனதில் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!
சோதனை காலத்தில் கூட நேர்மை, நம்பிக்கை, பொறுப்பு ஆகியவற்றை விட்டுவிடக்கூடாது என்றும் புதியதோர் உலகம் செய்வோம் என்ற வரிகளை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும் என்று கூறினார். சிறப்பான திட்டமிடல் வேண்டும் என்றும் உயர உயர வளரும் போது நமக்கு கீழ் இருப்பவர்களையும் உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னை பார்த்தாலே திமுகவுக்கு பயம்... கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வேல்முருகன்... ஸ்டாலினுக்கு நேரடி சவால்...!