பாஜக சர்வாதிகாரத்திற்கு அடிபணியாமல் செயல்படுவதாக கூறி ஊடகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.இன்று தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதன்படி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய பத்திரிகையாளர் தினத்தை ஒட்டி வாழ்த்துக்களை பகிர்ந்தார். எந்தவொரு ஜனநாயகத்திலும், அதிகாரத்தில் இருப்பவர்களால் நிறுவனங்கள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம்.
ஆனால் பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். தேசிய பத்திரிகை தினத்தன்று, மத்திய பாஜக அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து, அதன் தோல்விகள், அதன் ஊழல் செயல்கள் மற்றும் அதன் வஞ்சகத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு பத்திரிகையாளரையும் நான் பாராட்டுகிறேன் கூறியிருந்தார்.

அதிகாரத்தில் இருப்பவர்களால் ஊடக சுதந்திரம் பறிக்கப்படலாம் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதை சுட்டிக்காட்டி தமிழக பாஜக விமர்சித்துள்ளது. கண்ணாடி சார் அது என்ற முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்துள்ளனர். “இம்” என்றால் சிறைவாசம், “ஏன்?” என்றால் வனவாசம் என்ற நிலை உங்கள் இருண்ட மாடல் ஆட்சியில் தான் உள்ளது என்ன விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோட்டத்தையே கொண்டாட்டமாக மாற்றிய அறிவுத் திருவிழா… முதல்வர் வருகை பெருமகிழ்ச்சி… உதயநிதி பெருமிதம்..!
உங்கள் தரம்கெட்ட ஆட்சியைக் கேள்வி கேட்ட நூற்றுக்கு மேலானோர் மீது வழக்குகள் பதிந்தும் கைது செய்தும் அச்சுறுத்தும் நீங்கள் கருத்து சுதந்திரத்தைப் பற்றியெல்லாம் பேசுவது சாத்தான் ஓதும் வேதமே என்றும் கடுமையாக சாடியுள்ளது.
இதையும் படிங்க: விறுவிறு SIR… வெளிநாட்டு வாக்காளர் வகைப்பாட்டில் பிரச்சனை… அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை…!