தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2025-ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து, பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கியுள்ளது.

பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட பகுதிகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார்.
இதையும் படிங்க: வஞ்சிக்கும் திமுக.. 4 முறை மின்கட்டண உயர்வு! அதிமுக ஆட்சி அமைந்ததும்? வாக்குறுதிகளை கொடுத்த இபிஎஸ்..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக 9 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு முதலமைச்சர் திருச்சி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்டு காட்டூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் ரயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, அங்கு நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.

பின்னர் 10 ஆம் தேதி காலை திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை அவர், தொடங்கி வைக்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர், விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
இதையும் படிங்க: உணவுப்படியை உயர்த்தாத முதல்வருக்கு வெற்று விளம்பரம்.. அண்ணாமலை கடும் கண்டனம்..!