விஸ்வநாத் பிரதாப் சிங் (V.P. Singh) என்பவர் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான நபர். 1931 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்துக்கு அருகே உள்ள தாய் என்னும் இளவரசர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் மந்தா சமஸ்தானத்தை ஆண்டு வந்த பழமையான ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தது. சிறுவயதில் செல்வமும் அதிகாரமும் நிறைந்த சூழலில் வளர்ந்த போதிலும், பின்னர் அவர் அரசியலில் தன்னை ஒரு ஏழைத் தலைவராக உருவகப்படுத்திக் கொண்டது இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.
V.P. சிங் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் V.P. சிங் புகழ் ஓங்குக என தெரிவித்தார். தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர் V.P. சிங் எனவும் என் மீது அன்பு காட்டியவர் எனவும் கூறினார்.

பதவிகளைத் துச்சமாக நினைத்து, Social Justice-ஐ உயிர்க்கொள்கையாக மதித்தவர் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது என்றும் 2023-ஆம் ஆண்டு இதே நாளில், வி.பி.சிங் முழுவுருவச் சிலையை தான் திறந்து வைத்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க: தமிழகத்துக்கு ரெட் அலர்ட்... என்ன செய்யலாம்? முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஆலோசனை...!
EWS, NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே Miss செய்கிறோம் என்றும் கூறினார். சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகள் கண்ணீருக்கு திமுக அரசே பொறுப்பு... இதென்ன முதல்வரே? விளாசிய நயினார்...!