பணியாளர் தேர்வு வாரியம் ( SSC) இந்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு முக்கிய அமைப்பாகும், இது மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் குரூப் B மற்றும் குரூப் C பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை மேற்கொள்கிறது. 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வாரியம், வெளிப்படையான, நியாயமான மற்றும் திறமையான தேர்வு செயல்முறைகள் மூலம் இந்திய இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. SSC-யின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியவை, அவை இந்தியாவின் அரசு வேலைவாய்ப்பு முறையை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன.
இந்த நிலையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் பொறுப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக எம்பி சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை, கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்த தொல்லியல் துறை மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பெருநகரமான சென்னையில் ஒரே ஒரு தேர்வு மையம் தான் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டு தேர்வர்களை மத்திய அரசு விடாமல் வஞ்சித்து வருவதாகவும், தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் எம்.பி. சு. வெங்கடேசன் கூறினார்.
இதையும் படிங்க: முக்கியமான லெவல் கிராசிங்... அதெல்லாம் சரி சிக்னலோட ஏன் இணைக்கல? சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி..!
எனவே, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மையங்களில் இருந்தும், தேர்வர்களுக்கு அருகாமையில் உள்ள மையங்களை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பெரிய நகரங்களில், அதாவது சென்னையில் உள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், எதிர்காலத்திலாவது நுழைவுச் சீட்டுகள் முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டும் என்றும் தேர்வுகளை நடத்தும் பணியை ஒதுக்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே, மாற்றத்தின் போது ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க ஒரு தெளிவான செயல்முறையை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணை ஜனாதிபதியின் திடீர் விலகல் எதிரொலி! தேர்தல் ஆணையத்தின் அதிமுக்கிய அறிவிப்பு..!