100 நாள் வேலை திட்டத்தின் மாற்றங்கள் அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்டவை உள்நோக்கம் கொண்டது என்று கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தைக் கைவிட்டு விபிஜி ராம்ஜி திட்டமாக மாற்றி வேலை உறுதியைப் பறிக்கும் மசோதாவை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பிஜேபி அரசு தாக்கல் செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான இந்தியர்களின் வேலை உரிமையை பறித்து, அண்ணல் காந்தியின் பெயரை நீக்கி முன்மொழியப்பட்ட இந்த மக்கள் விரோத மசோதாவை நிறைவேற்றக்கூடாது என 220 க்கும் மேற்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் உறுதிமிக்கப் போராட்டத்தை நடத்தியதாக தெரிவித்தார்.

விவாதத்தில் பேசிய 50க்கும் மேற்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். ஆனால் இவ்வளவு எதிர்ப்பையும் மீறி , நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் , எதிர்கட்சிகளின் குரலையும் , கோடிக்கணக்கான இந்திய மக்களின் கோரிக்கையையும் துளியும் மதிக்காமல் சட்டமாக பாஜக அரசு நிறைவேற்றியது என்று கூறினார்.
இதையும் படிங்க: ஸ்வயம் தேர்வுக்கு தமிழ்நாட்டிலேயே சென்டர்கள்... அநீதி தடுக்கப்பட்டதாக MP சு.வெங்கடேசன் பெருமூச்சு...!
அந்தச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடியதற்காக தங்கள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி பாஜக தலைவர்கள் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக நியதிகளையும், நாடாளுமன்ற மரபுகளையும் மதிக்காமல் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு எதிரான விபிஜி - ராம்ஜி சட்டத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் வலிமையாகத் தொடரும். பாஜகவினரின் சதியை உறுதியோடு எதிர்கொள்வோம் எனவும் திட்டவட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: உழவர் நலன் காக்கும் சாதனைகள் தொடரும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி