சென்னையின் முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றான 16 கிலோமீட்டர் நீளமுள்ள வேளச்சேரி-தாம்பரம் உயர்வேகச் சாலை (Velachery-Tambaram High Road) விரைவில் மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என்று அழைக்கப்பட இருக்கிறது. தாம்பரம் மாநகராட்சி கவுன்சில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவு இந்திய ராணுவ வீரரின் தியாகத்தையும், சென்னையுடனான அவரது ஆழமான தொடர்பையும் நினைவுகூரும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
மேஜர் முகுந்த் வரதராஜன் 1983 ஏப்ரல் 12 அன்று கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை ர. வரதராஜன் பொதுத் துறை வங்கியில் பணியாற்றியதால், முகுந்தின் சிறு வயதில் குடும்பம் சென்னை அருகே தாம்பரத்துக்கு இடம்பெயர்ந்தது. அவர் பேராசிரியர்கள் காலனியில் வளர்ந்தார். BPO-வில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர், தனது குழந்தைப் பருவக் கனவை நனவாக்கும் வகையில் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சேர்ந்தார்.

2006-ல் 22 ராஜ்புத் ரெஜிமெண்டில் லெப்டினெண்டாக நியமிக்கப்பட்ட முகுந்த், பின்னர் கேப்டன், மேஜர் பதவிகளுக்கு உயர்ந்தார். லெபனான் ஐ.நா. பணியிலும் ஈடுபட்டிருந்த அவர், 2012-ல் ஜம்மு-காஷ்மீரில் 44 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். 2013 ஜூனில் ஷோபியான் பகுதியில் தீவிரவாதத் தாக்குதலின்போது ஜெய்ஷ்-இ-முகமது தளபதி அல்தாஃப் பாபாவை அழித்த வீரச் செயலுக்கு பெயர் பெற்றார்.
இதையும் படிங்க: "ஆபரேஷன் டூஃபான்" விவகாரம்..!! தமிழ்நாட்டின் கவனத்திற்கு கேரள முதல்வர் பரபரப்பு கடிதம்..!!
2014 ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையில் அவரது வீரம் உச்சம் தொட்டது. காஷ்மீரின் காஜிபத்ரி கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டபோது, முகுந்த் தலைமையில் இரு பேர் கொண்ட குழு செயல்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா உட்பட மூன்று தீவிரவாதிகளை அழித்த அவர், கடும் துப்பாக்கிச் சண்டையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயரை தாம்பரம் வேளச்சேரி சாலைக்கு சூட்டுவதாக மாநகராட்சி கூட்டத்தை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில் தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: பொறுப்பா நடந்துக்கோங்க..! அரசு குறித்து அவதூறு..! காவல்துறை வார்னிங்.!