முஸ்லிம் திருமணங்களை 'முபாரத்' மூலம் முறித்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் தேவையில்லை குஜராத் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
முபாரத் என்றால் பரஸ்பர ஒப்புதலுடன் எடுக்கப்படும் விவாகரத்து என்று பொருள். முஸ்லிம் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவர எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நீதிபதிகள் ஏ.ஒய்.கோக்ஜே மற்றும் நீதிபதி என்.எஸ்.சஞ்சய் கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது. முஸ்லீம்களின் நிக்காவை ரத்து செய்வது தொடர்பாக குர்ஆன் மற்றும் ஹதீஸை போன்ற புனித நூல்களில் குறிப்பிட்டப்பட்டுள்ளவற்றை மேற்கொள் காட்டிய நீதிபதிகள், அதில் எங்கும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் கட்டாயம் எனக்கூறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தம்பி விஜய் தூங்கி எழுந்தாச்சா? இது சினிமா கிடையாது! விளாசிய தமிழிசை…
குடும்ப நீதிமன்ற உத்தரவு ரத்து:
முபாரத் சட்டப்பூர்வமானது என்று கூறிய நீதிபதிகள், ராஜ்கோட் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தனர். அதில், முஸ்லிம் தம்பதியினர் முபாரத் மூலம் விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்ததை குடும்ப நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கில், இந்த வழக்கு குடும்ப நீதிமன்றச் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் வராது என்று குடும்ப நீதிமன்றம் கூறியிருந்தது. விவாகரத்துக்கு பரஸ்பர சம்மதத்துடன் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லை, எனவே விவாகரத்துக்கான விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்று குடும்ப நீதிமன்றம் கூறியது.
வழக்கு விவரம் என்ன?
சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். முபாரத்துடனான திருமணத்தை முடித்துக்கொண்டு, பரஸ்பர சம்மதத்துடன் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
உயர்நீதிமன்றம் என்ன சொன்னது?
குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் தவறு என்று அறிவித்தது. விவாகரத்துக்கு எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் அவசியம் என்றும், இது குர்ஆன், ஹதீஸ் அல்லது முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் எங்கும் எழுதப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் கூறியது. பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து செய்வதற்கு முபாரத் சட்டப்பூர்வமானது என்றும், இதற்கு எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் தேவையில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. முபாரத் (பரஸ்பர சம்மதம்) மூலம் பிரிந்து செல்ல விரும்பும் முஸ்லிம் தம்பதிகளுக்கு உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு நிவாரணமாகும்.
இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி... பிக்கப் வேன் கவிழ்ந்து 10 பெண்கள் பலி... நடந்தது என்ன?