பொங்கல் திருநாளுக்கு முதல் நாளாக, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பழமொழியை முழுமையாக உணர்த்தும் ஒரு திருவிழாவாக விளங்குகிறது. இந்தத் தீயானது வெறும் பொருட்களை எரிப்பதோடு நின்றுவிடுவதில்லை. நமது மனதில் படிந்திருக்கும் பழைய கோபங்கள், பொறாமை, வன்மம், துயரங்கள் எல்லாவற்றையும் சுட்டெரித்து சாம்பலாக்க வேண்டும் என்ற ஆழமான தத்துவத்தை உள்ளடக்கியது.
வாழ்க்கையைப் புதுப்பிக்கும், மனதைத் தெளிவுபடுத்தும், இயற்கையோடு இணைக்கும் ஒரு அழகிய திருநாள். அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இந்தப் போகியைக் கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கலை வரவேற்கும் விதமாக, இன்று போகிப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது.

அதன்படி போகிப் அன்று மக்கள் தீ மூட்டி பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரிக்கின்றனர். இந்த நடைமுறையானது தேவையற்ற சோகங்கள், தீய எண்ணங்கள் போன்றவற்றை எரித்து அழித்து, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை வரவேற்பதை பிரதிபலிக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நல்ல நாளில் நமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக இணைந்து பழையவையான பயன்படாத இந்த தீய சக்தி ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சேலத்தில் நிகழ்ந்த படுகொலை... வேட்டையாடும் வன்முறைக் கும்பல்..! திமுகவை தோலுரித்த தவெக…!
மேலும், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்திட சூளுரைப்போம் என கூறியுள்ளார். இந்த போகி பொங்கல் 2026 உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், சிறந்த ஆரோக்கியத்தையும், ஆன்மீகத்தையும் கொண்டு வரட்டும் என்றும் அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்ன பாத்தா அரசுக்கு பயமா? போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் உங்க மாடலா... கிழித்து தொங்கவிட்ட சீமான்..!