திரைத்துறையில் காலத்தால் அழியாத ரசிக பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார்.
இந்த 50 ஆண்டு காலப் பயணம், ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண வெற்றிக் கதையாகவும், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்ற புரட்சிகரமான பயணமாகவும் அமைந்துள்ளது. எந்தவித பின்புலமும் இல்லாமல், வறுமையையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் கடந்து, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினியின் கதை, உழைப்பு, நம்பிக்கை, மற்றும் தனித்துவமான பாணியின் வெற்றிக் காவியம்.
1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படம், ரஜினியை முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது. இந்தப் படம், அவரது திரைப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அவரது எதார்த்தமான நடிப்பும், தனித்துவமான பாணியும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதையும் படிங்க: வாழ்த்திய அன்பு நெஞ்சங்களே.. மனமார்ந்த நன்றி! நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி..!

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால திரைத்துறை பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும், பொதுமக்களும் வாழ்த்து கூறி உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவருக்கு விநாயகர் சிலை ஒன்றையும் நயினார் நாகேந்திரன் பரிசாக கொடுத்துள்ளார். 50 ஆண்டுகால திரைத்துறை பயண நிறைவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின்.. ஃபோனில் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்..!