சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவ கட்டடங்கள் திறப்பு விழாவில் முதல்வர் விஜய் கலந்து கொண்டார். அரசு மருத்துவ மனைக்கு உதவும் வகையில் சிறு தொகையை செலுத்தும் வகையில் நலம் டிஎன் இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான ‘ நலம் TN’ இணையதளத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இணையதளத்தில் மக்கள் எளிதாக பெற உதவும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை கலந்து கொண்ட முதல்வர் விஜய் 139 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ கட்டடங்கள் மற்றும் நவீன் உபகரணங்களை திறந்து வைத்தார்.

தொடர்ந்து 751 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். மாற்றுத்திறனாளி பிரிவில் தேர்வான மருத்துவருக்கு மேடையில் இருந்த இறங்கிச்சென்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட 1393 பேருக்கும் முதல்வர் விஜய் பணி ஆணைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இனி OP வாங்க NO TENSION...! வந்தாச்சு நலம் Ai APP..!! அமைச்சர் அருண் ராஜ் தொடங்கி வைப்பு..!!
அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில் தினசரி ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வருகை தருகின்றனர். பதிவு மற்றும் முன்பதிவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ‘நலம் ஏஐ’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உரையாடல் அடிப்படையில் செயல்படும் ஏஐ சாட்பாட் ஆகும். மக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே எளிய உரையாடல் மூலம் மருத்துவ முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: "வீட்டிலிருந்தே அப்பாயிண்ட்மென்ட்"..! இனி அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு அவசியம் இல்லை..!!