வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து முற்றிலும் தடை… நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்…!

ஈரான் போர் பதட்டம் காரணமாக இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், 3.50 கோடி முட்டைகள் நடுக்கடலில் தத்தளிப்பு.

நாமக்கல் லில் இருந்து கப்பலில் 77 கண்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்ட 3.50 கோடி முட்டைகள் தத்தளிப்பு.

நாமக்கல் மண்டலத்ததில், சுமார் 1,100 க்கு மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

 நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவிற்கு மொத்தமாக தடை… பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி… உலகமே பதறும் காரணம்…!

சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஒரு சில ஆப்ரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஈரான் போர் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தற்போது முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்  கூறுகையில்: நாமக்கல் லில் இருந்து வளைகுடா நாடுகளான ஈரான் ஈராக் துபாய் கத்தார் ஓமன் பஹ்ரைன் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆகி வந்தது.

ஈரான் போர் பதட்டம் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் தடைப்பட்டுள்ளது. எந்த கப்பலும் செல்லவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் லில் இருந்து 77 கண்டெய்னர் ல் கப்பலில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் நடு கடலில் தத்தளித்து வருகிறது. இதனால் ஏற்றுமதியாளர் செய்வதறியாது உள்ளனர்.

இதையும் படிங்க: விண்ணை முட்டும் முட்டை விலை… இரண்டே நாட்களில் இவ்வளவா?… இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

egg

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी