தொடர்விலை ஏற்றத்தால் மக்கள் கடைகளுக்கு வருவதை தவிர்ப்பதால் கடையை மூடிவிட்டு செல்ல வேண்டியது தான் என உரிமையாளர்கள் கவலை. சர்க்கரை, உளுந்து, பருப்பு போன்ற மூலப்பொருட்களை பயன்படுத்தி தான் டீக்கடைகள் செயல்பட்டு வருகின்ற நிலை இருக்கிறது. இது போன்ற மூலப் பொருட்களின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பாக குறைவாக இருந்திருக்கிறது.
தற்பொழுது பல மடங்கு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக சர்க்கரை 38 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது 72 ரூபாய்க்கு கிலோ விற்கப்படுகிறது. உளுந்து 1 கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல பருப்பு ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது 145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கு முன்பு விற்கப்பட்ட நிலையில் தற்பொழுது 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ச்சியாக டீக்கடைகளில் பயன்படுத்தக்கூடிய மூலப் பொருட்களின் விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் இதை சமாளிக்கும் வகையில் நெல்லையில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் செயல்படும் ஒரு சில டீக்கடைகளில் டீ, வடை போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரி குடும்பத்தினர்! அரசு உடனே மீட்க வேண்டும் என மகன் கண்ணீர் கோரிக்கை!
இதுபோன்று பல்வேறு உணவுப் பொருட்களின் விலைகளும் டீக்கடைகளில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோன்று விலை உயர்வு உயர்த்தி கொண்டே இருக்கக்கூடிய காரணத்தினால் வாடிக்கையாளர்கள் டீக்கடைகளுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக நீடிக்கும் இது போன்ற நிலையால் நஷ்டத்தை சந்திக்கிறோம். இதே போல தொடர்ந்தால் டீக்கடைகளை மூடிவிட்டு செல்லும் நிலை தான் ஏற்படும் என டீக்கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கூலித்தொழிலாளிகளாக இருக்கும் மக்களும் தங்கள் பசியை போக்குவதற்காக அடிக்கடி டீ தான் குடிக்கின்றனர் அவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.
விலைப்பட்டியல்:
1. 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டி தற்பொழுது 15 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது
2. 17 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட காபி தற்பொழுது 20 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.
3. 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பருப்பு வடை 14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. உளுந்து வடை 14 ரூபாய்.
5. வெங்காய வடை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்... தவிக்கும் குடும்பங்கள்..! முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.!