மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகை தந்துள்ளார். அவருக்கு தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தியை வரவேற்பதற்காக திமுக முக்கிய நிர்வாகிகளும் நீலகிரியில் முகாமிட்டனர். நீலகிரிக்கு வந்தடைந்த ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பாரம்பரிய நடனம் ஆடி ராகுல் காந்தியை உற்சாகமாக வரவேற்றனர்.
ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் மைசூரில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்தின் கூடலூருக்கு பிற்பகல் 3 மணியளவில் வந்தடைந்தார். அங்கு உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி தனது 50ஆவது ஆண்டு விழாவை அதாவது பொன்விழாவை கொண்டாடுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.

இந்தப் பள்ளியில் அவர் 2022ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஒரு இரவு தங்கியிருந்த நினைவு உண்டு. அப்போது அவர் கூடலூரின் அழகையும் மக்களின் அன்பையும் பாராட்டியிருந்தார். அந்த உறவின் தொடர்ச்சியாகவே இந்த வருகை அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில், ராகுல் காந்தி சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உஷார் மக்களே..! உதற போகுது... நீலகிரி, கொடைக்கானலுக்கு உறைபனி எச்சரிக்கை...!
இது அரசியல் அல்லாத தனிப்பட்ட பயணம் என்பதால், காங்கிரஸ் கட்சி சார்பில் எந்த பொதுக்கூட்டமோ அல்லது அரசியல் நிகழ்ச்சியோ ஏற்பாடு செய்யப்படவில்லை. கூடலூரில் ஹெலிபேட் அருகே கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த வருகையை முன்னிட்டு கூடலூர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. போலீஸ் பாதுகாப்பு, உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்களின் ஏற்பாடுகள் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன.
இதையும் படிங்க: ஒரே குளிருப்பா..!! ரோட்டுல கால் வெக்க முடியல.. இன்று ஊட்டியில் உறைபனிக்கு வாய்ப்பாம்..!! ஜாக்கிரதை மக்களே..!!