உலகப்புகழ் பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வருகிற செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவு கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தசராத்திருவிழாவிற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று கோயில் வளாகம் அருகே உள்ள சிவனைந்த பெருமாள் மஹாலில் நடந்தது.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் காவல்துறையினர், போக்குவரத்து துறை அதிகாரிகள், முத்தாரம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் மற்றும் அதிகாரிகள், தசரா குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வருடம்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கொடியேறும் சமயங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பிரம்ம முகூர்த்த நேரமாக அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்று விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தசரா குழு நிர்வாகிகள் சார்பாகவும் பக்தர்கள் சார்பாகவும் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. கூட்டத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் ஒருசில நிபந்தனைகளை முன் வைத்தனர். அதில் சாதிகள் சம்பந்தப்பட்ட கொடிகள், ரிப்பன்கள், டீ ஷர்ட் அணிந்து கொண்டு வர அனுமதி இல்லை. அப்படி அணிந்து வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இரும்பினால் ஆன ஆயுதங்கள் கொண்டு வர அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அமமுகவும் அம்பேலா?... பாஜக கூட்டணிக்கு சைலண்ட்டாக ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி...!
மேலும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக குடிதண்ணீர், கழிப்பிடம் வசதி ஏற்படுத்தி தரப்படும். வாகன ஓட்டிகளுக்கு உதவி செய்யும் பொருட்டு பார்க்கிங் வசதி குறித்து அறிவிப்புகள் முன்கூட்டியே தெரியப்படுத்தப்படும். தற்காலிக கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாகவும் வழங்க கடைக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். முடி காணிக்கை செலுத்த தனி வழி அமைக்கப்படும், பொதுமக்களுக்கு தனிவழியும் தசரா குழுக்களுக்கும் தனி வழி அமைக்கப்படும். தசரா திருவிழா குறித்து அனைத்து தகவல்களும் வலைதளங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பஜார்களில் ஒலிபெருக்கி மூலம் நடனம் ஆட தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செப்டம்பர் 9 வரைக்கும் தான் டைம்... இந்த 4 ஐபோன்களும் இனி கிடைக்காது - உடனே வாங்குங்க!