வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்… தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து…23 பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்…!

ஆம்னி பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தகவல்

திண்டுக்கல் அருகே பெங்களூருக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து – 23 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக பெங்களூருக்கு தனியார் பேருந்து நேற்று இரவு கிளம்பியது. ஆம்னி பேருந்தை போடியைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 44 )என்பவர் ஓட்டிச் சென்றார். 

ஆம்னி பேருந்து இன்று அதிகாலை 2::30 மணி அளவில் திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரின் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.

இதையும் படிங்க: அதிகாலையிலேயே பேரதிர்ச்சி… 650 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… 37 பேர் பலி…!

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உட்பட 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயம் அடைந்த 23 நபர்களில் 10 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை சிறு காயங்கள் என்பதால் உடனடியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இதில், பலத்த காயம் அடைந்த திண்டுக்கல் சுவாதி (30), கம்பம் தங்கம் (35), கம்பம் முத்துச்செல்வம் (28), உத்தமபாளையம் சசி பிரபா (36), கம்பம் ரேகா (27) மற்றும் தேனி குமுதா (45) ஆகிய 5 பெண்கள், 1 ஆண் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்துக் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தனியார் பேருந்து ஓட்டுனர் அப்பாஸ் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: #BREAKING விழுப்புரத்தில் பேரதிர்ச்சி… தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து… 30 பேரின் நிலை என்ன?

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी