வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
இந்தியா

தலைதூக்கும் வாக்காளர் திருத்த விவகாரம்! பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. இரு அவைகளும் முடக்கம்..!

பீகார் வாக்காளர் சிறப்பு திருத்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளால், வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுத்தது. அப்போது, பீகார் மட்டுமல்ல நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தெரிவித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்தும் தேர்தல் ஆணையம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. விமர்சனம் செய்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் பல கேள்விகளையும் முன் வைத்தது.

இதையும் படிங்க: எதிர்பார்ப்புடன் காத்திருந்த முக்கிய விவாதம்! பிரதமர் மோடி பார்லிமென்ட்க்கு வருகை… பரபரப்பு!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஜனநாயகத்தின் தாய் என்றும் தேர்தல் ஆணையம், சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டு, இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இரண்டு இடங்களில் வாக்குகளைப் பதிவு செய்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் அல்லது வெளிநாட்டு வாக்காளர்கள், அரசியலமைப்பிற்கு எதிராக, வாக்களிப்பவர்களை நீக்க வேண்டியது அவசியம் இல்லையா என கேள்வி எழுப்பியது. 

பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதித்து ஆகவேண்டும் எனக் கூறி ஐந்தாவது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் முடங்கின. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் கூச்சல், முழக்கத்தால் மக்களவை பிற்பகல் ஒரு மணி வரையும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமா இல்லையா., இவ்வாறு நடந்து கொள்வது முறையா என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி எழுப்பி அவையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: #BREAKING: மாநிலங்களவையில் திமுக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी