அந்தியூர் அருகே எடப்பாடி பழனிச்சாமி உறவினருக்கு சொந்தமான ஸ்பேக் மற்றும் எத்தனால் தொழிற்சாலையால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு என குற்றச்சாட்டு.
காற்று மற்றும் நீர் மாசுபட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கவே முடியவில்லை என பொதுமக்கள் முறையீடு. சாலை மறியலில் ஈடுபட தமிழக வெற்றி கழகத்தினர் தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று பல்வேறு அரசு நலத்திட்டங்கள் துவக்க விழா நிகழ்ச்சிகளில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்தனர்.
இதையும் படிங்க: அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் திட்டம் தயார்? எடப்பாடி பழனிசாமியின் புதிய வியூகம்!
இந்த நிலையில் அம்மாபேட்டை அருகே அட்டவணைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழாவிற்கு வந்தபோது பூனாட்சி, ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் செங்கோட்டையன் வாகனத்தை வழிமறித்து முற்றுகையிட்டு அங்கு செயல்பட்டு வரும் ஸ்பேக் மற்றும் எத்தனால் ஃபேக்டரில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களால் குடிநீர் மாசுபடுவதாகவும் அதேபோல் காற்று மாசுபாடு ஈடுபட்டு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும்,
இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்,
கோரிக்கையை கேட்ட அமைச்சர் இது யாருடைய பேக்டரி என கேட்டார் அப்போது இது எடப்பாடி பழனிச்சாமி உடையது என மக்கள் தெரிவித்தனர், தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்,
தொடர்ந்து சிறிது நேரம் கழித்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த பொதுமக்களை சந்திக்க வந்த தவெக நிர்வாகிகள் அவர்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது தங்கள் பகுதிக்கு வந்து தண்ணீர் எப்படி உள்ளது என பார்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் அது குறித்து எந்த ஒரு செவியும் சாய்காததால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர் தொடர்ந்து வாருங்கள் சாலை மறியலில் ஈடுபடுங்கள் எனக் கூறி அவர்களை சாலை மறியலில் ஈடுபட வைத்தனர்,
இந்த நிலையில் மீண்டும் திரும்பும் அந்த வழியாக வந்த அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி,
தற்போது தான் வந்துள்ளோம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
செங்கோட்டையன் தனது பிரச்சாரத்தின் போது ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி 3000 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக இந்த ஸ்பேக் மற்றும் எத்தனால் நாள் ஃபேக்டரி குறித்து பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: "ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும்"... 2027 தேர்தலை குறிவைத்த இபிஎஸ்... கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு!