தமிழக அரசியல் பாஜகவுக்கு எப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. திராவிட அரசியலின் ஆதிக்கம் மிகுந்த இந்த மாநிலத்தில், பாஜக தனது செல்வாக்கை விரிவாக்குவதற்கு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், 40 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட மாநிலமாகவும் இருப்பதால், தேசிய அளவில் பாஜகவின் ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
குறிப்பாக, தென்னிந்தியாவில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு குறைவாக உள்ள நிலையில், தமிழகத்தில் வெற்றி பெறுவது கட்சியின் தேசிய இமேஜை உயர்த்தும் என்பது பாஜக தலைமையின் கணிப்பு.2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதிகூட வெல்லவில்லை என்றாலும், வாக்கு சதவீதத்தை சற்று உயர்த்தியது.

இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு திருப்புமுனையாக பாஜக பார்க்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்தி, என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்தால், அது பாஜகவின் தென்னிந்திய விரிவாக்கத்திற்கு பெரிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அன்புமணி தரப்பு பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளது. இன்னும் பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணையும் என்ற உறுதிப்பட தெரிவித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர் வேலு நாச்சியார்..!! பிரதமர் மோடி புகழாரம்..!!
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளை அறிமுகம் செய்ய ஜனவரி 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற உள்ள தாமரை மகளிர் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் வருகைக்குள் கூட்டணி பேச்சு வார்த்தைகளை முடித்து கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! விரைவில் ஸ்லீப்பர் ரயில்... தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!