தமிழ் ஆர்வலர் என கூறும் அன்புமணி ராமதாஸ் நிகழ்வில் எழுத்துபிழையுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு. அறிவு என்ற வார்த்தையையே எழுத்துபிழையுடன் பேனர் வைத்த பாமக.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக விளை நிலங்களில் இறங்கி பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ் விளை நிலங்களை அழித்து அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகளுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்விற்காக பாமக சார்பில், வேண்டாம், வேண்டாம், அறிவு சார் நகரம் வேண்டாம் என மேடையில் பேனர் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்புமணியை டாரு டாராக கிழித்த ராமதாஸ்...!
தமிழ் ஆர்வலர் என கூறி கொள்ளும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்விற்காக மேடையில் வைக்கப்பட்ட பேனரில் அறிவு என்ற வார்த்தையை அறவு என எழுத்துபிழையுடன் பேனர் வைத்திருந்தனர். அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்வில் தமிழ் எழுத்து பிழை இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நடைபயணத்திற்கு தடையில்லை - அன்புமணிக்கு கிடைத்த ஹேப்பி நியூஸ்...!